Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 ஜனவரி 21 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. விஜய் சேதுபதிக்கு பெயர் பெற்று தந்த திரைப்படங்களில் ஒன்று
கோகுல் என்பவர் இதனை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்றிருந்த 'சுமார் மூஞ்சி குமார்' கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.
அதுவும் அவர் சென்னைத் தமிழ் பேசி, நடித்திருந்த விதம் விமர்சகர்களிடையேயும் பாராட்டுக்களை அள்ளிக் குவித்தது. அதேசமயம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்ற கருத்தும் உள்ளது.
இந்நிலையில் விஜய்சேதுபதியும், இயக்குநர் கோகுலும் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளார்களாம். சமீபத்தில் நடந்த விஜய்சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இதுகுறித்து இருவரும் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இன்னொரு திரைப்படத்தையும் இதற்கத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியிலேயே உருவாக்கலாமா எனவும் யோசித்திருக்கிறார்களாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025