Menaka Mookandi / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

'கும்கி' திரைப்படம் மூலம் லட்சுமிமேனன் கதாநாயகியாக அறிமுகமானார். 2012இல் இத்திரைப்படம் வந்தது. 'சுந்தரபாண்டியன்' திரைப்படம் இவரை மேலும் பிரபலபடுத்தியது.
தொடர்ந்து சசிகுமாருடன் 'குட்டி புலி', விஷாலுடன் 'பாண்டியநாடு', 'நான் சிகப்பு மனிதன்' விமலுடன் 'மஞ்சப்பை', சித்தார்த்துடன் 'ஜிகர்தண்டா' ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது கார்த்தியுடன் 'கொம்பன்', கவுதம் கார்த்திக்குடன் 'சிப்பாய்' திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்திய ஊடகமொன்றுக்கு லட்சுமிமேனன் அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியுள்ளதாவது,
'நான் சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன். நிறைய திரைபபடங்களில் கிராமத்து பெண் போன்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் மாதிரியுமான கேரக்டர்களிலேயே நடித்து இருக்கிறேன்.
அதேபோன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு வாய்ப்புகளும் வருகின்றன. இது எனக்கு பிடிக்கவில்லை. ஒரே மாதிரி வேடங்களில் நடித்து போரடித்து விட்டது. எனவே தான் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறேன்.
இனி மேல் படிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன். தற்போது பிளஸ் – 2 (உயர்தரம்) படிக்கிறேன். தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதே இப்போதைய நோக்கம். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்க முடிவு செய்துள்ளேன். அதன்பிறகு பேஷன் டிசைனர் ஆவேன்' என்று லட்சுமிமேனன் கூறியுள்ளார்.


50 minute ago
1 hours ago
2 hours ago
hijas Saturday, 07 February 2015 06:11 AM
I so feel
Reply : 0 0
gayathri Monday, 09 February 2015 06:08 AM
romba santhosam
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago