2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஜொலிக்கும் தமன்னா

George   / 2015 மார்ச் 22 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடித்தாலும் இல்லாவிட்டாலும் இனி எப்போதுமே நடிகை தமன்னா ஜொலித்துக்கொண்டே இருக்க போகிறார் என்று சொன்னால் குழப்பமாக உள்ளதா?

அதற்கு காரணம் இதுதான். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா சொந்தமாக நகை வியாபாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளாராம். 

'வைட் அண்ட் கோல்ட்' என்ற பெயரில் நகைகளை வடிவமைத்து விற்பனை  செய்கிறார். நகைகளை வடிவமைக்கும்; பணிகளில் இந்தியாவின் முன்னணி வடிவமைப்பாளர்கள்; ஈடுபட்டுள்ளதுடன் தனது சொந்த வடிவமைப்பையும் தமன்னா செய்ய உள்ளாராம். 

ஆக, எப்போது சினிமாவில் மார்க்கெட் போனாலும் தமன்னாவுக்கு நகை மார்க்கெட் இருக்கவே இருக்கிறது.  நடித்தாலும், நடிக்கவில்லையென்றாலும் தமன்னா ஜொலித்துக் கொண்டேயிருப்பார். 

இப்ப சொல்லுங்க தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தம் இருக்குதானே!

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .