Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மார்ச் 30 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்களை எதிர்பார்ப்பதாக நடிகை லக்ஷ்மி மேனன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் லக்ஷ்மி மேனன். பேரழகியாக இல்லாவிட்டாலும் அடுத்த வீட்டுப் பெண் போன்று அம்சமாக இருக்கும் அவரை தமிழக ரசிகர்களுக்கு பிடித்தவிட்டது.
அதனால் லக்ஷ்மியை கொண்டாடித் தீர்க்கிறார்கள். அவரும் தன்னை ஆதரிக்கும் கோலிவுட்டில் பல படங்களில் நடிக்க விரும்புகிறார்.
பொதுவாக கிசுகிசுக்களை படித்தால் நடிகைகள் கடுப்பாகி விடுவார்கள். சிலர் அதை பற்றி திட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பார்கள், சிலர் அட போங்கப்பா என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள்.
லக்ஷ்மி மேனன் சற்று வித்தியாசமானவராக உள்ளார். தன்னைப் பற்றி எழுதப்படும் கிசுகிசுக்களை விரும்பிப் படிக்கிறார்
என்னைப் பற்றி மேலும் பல கிசுகிசுக்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அவைகளை படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் லக்ஷ்மி.
செய்திகளை விட இந்த கிசுகிசுக்கள் மூலம் தான் அதிகம் விளம்பரம் கிடைப்பதாக லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
என்னவொரு விளம்பர யுக்தி!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
3 hours ago