2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அசராமல் அசத்தும் வித்யா பாலன்

George   / 2015 ஏப்ரல் 01 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் திரைப்படங்களை காட்டிலும் மலையாளத் திரைப்படங்களில் பேசப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இவர் பல சர்ச்சைக்குரிய கதைகளில் நடித்து பிரபலம் ஆனார். இருந்தபோதிலும் அவருக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் அமையவில்லை. 

இருந்தாலும் அசரவில்லை அம்மணி, தூங்கும் போதும் காலை ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் இறந்துவிட்டதாக நினைத்து உயிரோடு புதைத்துவிடுவார்கள் என்ற வசனம் யாருக்கு பொருத்தமோ இல்லையோ திரையுலகினருக்கு பொருந்தும்.

வித்யா பாலனுக்கும் இது தெரிந்துதான் இருக்கிறது போல, அதனால்தான் ஓய்வு எடுத்துவிட்டால் ஓரம் கட்டிவிடுவார்கள் என்று விளம்பர படங்கள் மற்றும் பெண்கள் சார்ந்த ஆங்கில புத்தகங்களுக்கு மொடல் போஸ் கொடுத்துவருகிறார். 

சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த பெண்கள் தொடர்பான ஆங்கில புத்தக வெளியீட்டு விழா ஒன்றுக்கு மணப்பெண் கோலத்தில் வருகைதந்து அசத்தியுள்ளார் வித்யா பாலன். 

அதே நேரத்தில் கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு புத்தகத்துக்கான மொடல் போட்டோ எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம் வித்யா பாலன்.

போஸ் கொடுக்க தெரிந்த பொண்ணு பிழைத்துக்கொள்ளும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X