2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாப்பிள்ளை தேடும் த்ரிஷா

George   / 2015 ஜூலை 07 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

த்ரிஷாவுக்கும் சினிமா தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நடப்பதாக இருந்த திருமணம் இரத்தாகி விட்டது. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து திருமண ஏற்பாடுகளை கவனித்தபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவரும் சொல்லவில்லை. 

இந்த விவகாரத்தில் நிறைய பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்றும் அவர்களது பெயர்களை வெளியிட்டு புண்படுத்த விரும்பவில்லை என்றும் த்ரிஷா கூறி இருந்தார். தற்போது மேலும் திருமண முறிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

"எனது திருமணத்தை குடும்பத்தினர்தான் நிச்சயம் செய்தனர். நானும் சம்மதித்தேன். எல்லா ஏற்பாடுகளையும் பெற்றோரே செய்தனர். திருமணத்துக்காக சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அவை ஏற்புடையதாக இல்லை.

எனவேதான் திருமணத்தை நாங்கள் ரத்து செய்தோம்" என்று கூறியுள்ள த்ரிஷா, "எனக்கு பொருத்தமான மாப்பிள்ளைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை நிச்சயம் தேர்வு செய்வேன்" என்று கூறியுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X