2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஊடகங்களை சீண்டியது தனூஷா? பாலாஜி மோகனா?

George   / 2015 ஜூலை 19 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷ் நடித்து வெளியாகியுள்ள மாரி திரைப்படம் சரச்சையில் சிக்கியுள்ளது இந்த திரைப்படத்தை பார்த்த ஊடகங்கள் கொந்தளித்து போயுள்ளன.

குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த பிரச்சினையை விடக்கூடாது என்று தீவிரமாக இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு காரணம் இந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் கூறப்படும் வசனம் தான் காரணம் என்று சொல்கிறார்கள்.

அந்த காட்சி இதுதான், பொலிஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் ஜேசுதாசின் ஆட்கள் சந்தனமரம் கடத்துவதாக அறிந்து அதைக் கையும்களவுமாக ரௌடி தனுஷ் பிடித்து பகிரங்கப் படுத்துவது போன்ற காட்சி வரும். அப்போது திமுதிமு வென ஊடகவியலாளரகள் வீடியோ கேமராக்களுடன் அங்கு வருவார்கள். 

அப்போது ரௌடி மாரியாக இருக்கும் தனுஷ், கும்பலாக வராதீங்க ஒவ்வொருத்தனா வந்து எடுங்கடா என்று ஊடகங்களிடம் கூறுவார். இந்த ஒரு காட்சிதான் ஊடக நண்பர்கள் கொந்தளிக்கக் காரணம். மாரி கேரக்டருக்கு பொருத்தமில்லாத வசனம் அது. 

இந்த வசனத்தை வைத்து ஊடகங்களை இவ்வளவு கேவலமாகச் சீண்ட யார் காரணம் தனுஷா? அல்லது மூன்றாவது திரைப்படம் வருவதற்குள் அரைத்தமாவு கதையை அரைவேக்காட்டுப் திரைப்படமாக எடுத்துள்ள பாலாஜிமோகனா என்று கொதிக்கிறார்கள். இதை விரைவில் விட மாட்டோம் என்கிற அவர்களது கோபத்தில் அனல்தெறிக்கின்றதாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .