2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

Happy B'day நயன்...!

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை நயன்தாரா இன்று தனது 29ஆவது பிறந்தநாளை கேரளாவில் குடும்பத்தோடு கொண்டாடுகிறார். கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா மலையாள திரைப்படமான 'மனசினகரே'வின் மூலம் நடிகை ஆனார். அவர் நடித்த முதல் திரைப்படமே ஹிட்டானது. இதையடுத்து மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தான் இயக்குனர் ஹரியின் கண்ணில் நயன்தாரா பட்டார். சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்கினார் ஹரி. நயனை கோலிவுட்டுக்கு அழைத்து வந்த பெருமை ஹரியை சேரும்.

முதல் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடித்த நயன் தனது அடுத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியானார். முதல் இரண்டு திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் வந்த நயன் அடுத்ததாக கவர்ச்சிக்கு தாவினார்.

அவர் மம்மூட்டி, மோகன்லால், அஜீத், விஜய், வெங்கடேஷ் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

நயன்தாரா ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த ராஜா ராணி, அஜீத்துடன் நடித்த ஆரம்பம் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளன. இதையடுத்து நயன் நடித்துள்ள இந்தி திரைப்படமான கஹானியின் ரீமேக்கான அனாமிகா அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், நயன்தாரா இன்று தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாட அவர் கொச்சிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .