Editorial / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய நிலையில் கவினின் வெளியேற்றத்தால் லொஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய இருவரும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
கவினை சமாதானப்படுத்தி அவரது முடிவை மாற்ற இருவரும் தீவிர முயற்சி செய்தும் கவின் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் நேற்று அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் கவின் சென்ற பிறகு நடந்த டாஸ்க்கில் தீவிர கவனம் செலுத்தாமல் இருந்த லொஸ்லியா இன்னும் கவினின் பிரிவை தாங்க முடியாமல் சோகத்தில் தான் உள்ளார்.
இதனை அடுத்து சற்று முன் வெளியான ப்ரமோ வீடியோவில் தர்ஷனிடம் 'நான் ஃபைனல்ஸ் போக விரும்பவில்லை என்று கூறுகிறார். அதையே நினைத்து கொண்டிருந்தால் எப்படி? நீ உனது அப்பா அம்மாவுக்காகவும் வெளியே போன கவினுக்காகவும் விளையாடு என்றும், இன்னும் பத்து நாள் தான் உள்ளது, அதன் பிறகு நீ வெளியே போய் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்' என்று தர்ஷன் அறிவுரை கூறுகிறார்.
இருப்பினும் தர்ஷனின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் லொஸ்லியா இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது. இந்த வாரம் லாஸ்லியா வெளியேற வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டியில் லொஸ்லியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகுதி பெறுவார் என்றே தெரிகிறது.
#Day96 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/TszkaT6I0A
— Vijay Television (@vijaytelevision) September 27, 2019
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago