Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 31 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து, அஜீத் நடித்துள்ள திரைப்படம் விவேகம். பிரமாண்ட பட்ஜெட்டில், ஹொலிவூட் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில், அஜீத்துடன், பொலிவூட்டு நடிகர் விவேக் ஓபராய், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் விவேகம் திரைப்படம், ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, விவேகம் திரைப்படத்தின் வெளியீட்டை கொண்டாடி மகிழ, இப்போதே தயாராகி விட்ட அஜீத் ரசிகர்கள், அதற்கு முன்னதாக இன்னொரு கொண்டாட்டத்தையும் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது, ஓகஸ்ட் 2ஆம் திகதி, நடிகர் அஜீத், சினிமாவில் நடிக்கத் தொடங்கி, 25 வருடங்கள் ஆகிறது.
அதனால், தற்போது இணையதளத்தில், 25 years of Ajith எனும் ஹாஷ்டாக் உருவாக்கி, டிரன்டிங் செய்து வருகிறார்கள். அந்த வகையில், ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல். 10ஆம் திகதி வரை, அஜித் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
09 May 2025