Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தினமும் ஒவ்வொரு போட்டியாளரின் உறவினர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
முதல் நாள் முகின் தாயார் மற்றும் சகோதரி, மற்றும் இரண்டாம் நாள் லொஸ்லியா குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது
குறிப்பாக லொஸ்லியா தனது தந்தையை பத்து வருடங்கள் கழித்து பார்த்ததும், லொஸ்லியாவின் தந்தை அவருக்கு கூறிய அறிவுரையும் நேற்றைய நிகழ்ச்சியின் நெகிழ்ச்சியான காட்சிகள் ஆகும்.
இந்த நிலையில் இன்று தர்ஷன் தினமாக பிக்பாஸ் வீடு மாறுகிறது. ஆம், தர்ஷனின் தாயார் மற்றும் சகோதரி பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று வருகின்றனர்.
தாயாரை பார்த்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவரை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார் தர்ஷன். இந்த நிலையில் தர்ஷனின் தாயாரின் பிறந்த நாளும் பிக்பாஸ் வீட்டில் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது
இன்று தர்ஷன் குடும்பத்தினர் வந்ததையடுத்து இன்று மேலும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்களே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சண்டை சச்சரவின்றி ஒரு உணர்ச்சிகரமான வாரமாக இந்த வாரம் இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago