Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
George / 2016 மே 30 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கலாபவன் மணி குடித்த மதுபானத்தில் விஷத்தன்மை கொண்ட இரசாயனம் கலந்திருந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐதராபாத் தடயவியல் துறையினர் வெளியிட்டுள்ள நடிகர் கலாபவன் மணியின் உடல்கூறு ஆய்வு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரசாயன பொருள் மெதுவாக கொல்லும் தன்மை கொண்டது எனவும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் இந்த ரசாயனம் கொடுக்கப்பட்டதாலேயே கலாபவன் மணி உயிரிழந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன் வெளியிடப்பட்ட இரண்டு உடற்கூறு ஆய்வு அறிக்கைகளில் ஒன்றில், கலாபவன் மணி பூச்சி மருந்து கொடுத்து கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றொன்றில் இரசாயான பொருள் கொடுத்தே கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காகவே கேரள பொலிஸார் கேட்டுக் கொண்டதன் பேரில் ஐதராபாத் தடயவியல் ஆய்வாளர்கள் மீண்டும் ஆய்வு செய்தனர். இதில் விஷதன்மை கொண்ட இரசாயன பொருள் கொடுத்து கலாபவன் கொல்லப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025