2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இரசிகர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் முழுமையாக ஈடுபடுவது தொடர்பாக , தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (04) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கமல் நற்பணிமன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். கமல், ஏற்கெனவே அரசியல் தொடர்பாக வேறு மாநில முதலமைச்சர்களையும் சந்தித்துப் ​பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முதலில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அதன் பின்னர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.  இதனடிப்படையில், சின்னம், கொடி என அனைத்தையும் தீர்மானிக்கும் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக ஈபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X