Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 09 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறைவி திரைப்படம் ரெடியாகி பல மாதங்களாகியும் அதன் வெளியீட்டு திகதி தள்ளிக்கொண்டேபோகிறது.
எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் இளைவி வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே போகிறது.
கடைசியாக இம்மாதம் 20ஆம் திகதி இறைவியை வெளியிடு செய்ய முடிவு செய்திருந்தார்கள்.
இப்போது கிடைத்த தகவலின்படி இறைவி -இன் வெளியீட்டை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது ஜூன் 3ஆம் திகதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
இறைவி வெளியாகவிருக்கும் ஜூன் 3 ஆம் திகதி ஜி.வி.பிரகாஷின் எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைப்படமும் வெளியாகவுள்ளது.
அதுமட்டுமல்ல, ரஜினியின் கபாலி திரைப்படத்தையும் இதே நாளில் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை கபாலி வெளியாவது உறுதியானால் நிச்சயமாக இறைவி வெளியீடு மீண்டும் தள்ளிப்போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஜிகிர்தண்டா திரைப்படத்தை அடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய திரைப்படம் இறைவி.
விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பொபி சிம்ஹா முதலானோர் நடித்துள்ள இறைவி; திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago