Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 02 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் சேதுபதியின் ‘கவண்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் ஐஸ்வர்யாலட்சுமி. தற்போது, ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தனது திரை உலக லட்சியம் குறித்து, ஐஸ்வர்யாலட்சுமி கூறுகிறார்.
“கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்த ‘கவண்’ படத்தில் எனக்கு சிறிய வேடம் என்றாலும், விஜய்சேதுபதி குழுவில் இருந்ததால் நானும் கவனிக்கப்பட்டேன்.
இதனால் ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் குடும்பப் பாங்கான வேடம். அடுத்து கலையரசனுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.
சினிமாவில் என்னை மிகவும் கவர்ந்தவர் சமந்தா. அவரைப்போல் ஒரு நல்ல நடிகையாக சினிமாவில் இடம் பிடிக்க விரும்புகிறேன். ‘கவண்’ படத்தில் நடித்தபோது எனக்கு சினிமா பற்றி நிறைய அறிவுரை சொன்னவர் விஜய்சேதுபதி. நான் பெரிய நடிகை ஆக வேண்டும் என்று, அவரும் ஆசைப்படுகிறார்.
இப்போதும் அவரிடம் அறிவுரை கேட்டு வருகிறேன்.
நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. எதிர்காலத்தில் அவருடன் டூயட் பாட வேண்டும் என்பது எனது ஆசை. நல்லவர்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. எனவே விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆவேன்” என்று கூறியுள்ளார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago