George / 2016 ஏப்ரல் 10 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் கோலி-அனுஷ்கா காதல் புத்துயிர் பெற்றுள்ளதாக தெரிகிறது. அண்மையில், நடிகை அனுஷ்கா சர்மா - கோலி காதலில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். இவர்களுக்கு பிரிவுக்கு நடிகர் சல்மான் கான் தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கோலி-அனுஷ்கா காதல் புத்துயிர் பெற்றுள்ளதாக தெரிகிறது. இருவரும் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். அனுஷ்கா சர்மா கறுப்பு நிற உடையும், கோலி சாதாரண ஒரு டி-சர்ட் அணிந்த படி இரவு ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனிடையே யாரால் கோலியும், அனுஷ்காவும் பிரிந்ததாக செய்தி வந்ததோ, அவரால் தான் அதாவது நடிகர் சல்மான்கானால் தான் இவர்கள் மீண்டும் இணைந்ததாக கூறப்படுகிறது. கோலி - அனுஷ்கா இருவருக்கும் இடையே சமாதான தூதராக சல்மான் தான் முன்னின்று செயல்பட்டதாக பொலிவூட்டில் பேச்சாக கிடக்கிறது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026