Editorial / 2019 செப்டெம்பர் 01 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் இன்றைய எவிக்சன் படலத்தில் முதலில் ஷெரினும் பின்னர் முகினும் காப்பாற்றப்படுகின்றனர். இதனால் கவின், வனிதா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்களோ? என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படுகிறது.
மேலும், ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பார்வையாளர் ஒருவரின் கேள்வி அடுத்து இடம்பெறுகிறது. இதனையடுத்து இந்த வாரம் கமலுக்கே ஒரு குறும்படம் காண்பிக்கப்படுவது எதிர்பாராமல் நடந்த ஒரு பரபரப்பான விஷயம்.
அதேபோல் சேரன், லொஸ்லியா இருவரும் அப்பா-மகள் என்ற உறவில் நெருக்கமாக இருந்தாலும் அவ்வப்போது இருவருக்கும் விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் இருவருக்கும் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெறுகிறது.
அதனையடுத்து மீண்டும் தொடங்கிய எவிக்சன் படலத்தில் கவின் காப்பாற்றப்படுவதாக அறிவித்த கமல் அதன்பின்னர் இந்த வாரம் எவிக்சன் இல்லை என்பதை சொல்கிறார். இதனால் ஒருசிலருக்கு மகிழ்ச்சியும் ஒருசிலருக்கு ஏமாற்றமும் நிகழ்கிறது.
மேலும், அடுத்த வாரம் வெளியேற்றப்படும் நபர் சீக்ரெட் அறையில் தங்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் கஸ்தூரி சீக்ரெட் அறையை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
34 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
1 hours ago
3 hours ago