2025 மே 10, சனிக்கிழமை

காட்டமாட்டார் ரெஜினா

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதர்வாவுடன் நடித்த “ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்” திரைப்படத்தையடுத்து, சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ராஜதந்திரம்-2, பார்ட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா.  

தெலுங்கில் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடித்த நக்ஷ்த்ரம் என்ற தி​ைரப்படம், கடந்த 4ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக அதிரடியாக கிளாமரை அவர் வெளிப்படுத்தி நடித்திருந்தார் ரெஜினா. ஆனால், அந்தத் திரைப்படம் தோல்வியடைந்து விட்டது. இந்தத் திரைப்படத்தில் ரெஜினாவின் கிளாமரும், அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனால், கிளாமராக நடித்தால் தனது மார்க்கெட் எகிறி விடும் என்று கணக்குப்போட்ட ரெஜினா, அந்தத் திரைப்படம் தோல்வியடைந்ததோடு தனது கிளாமரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதால், மனதளவில் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.  

அத்தோடு, இனிமேல் தேவையில்லாமல் அதிகப்படியான கிளாமராக நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவு செய்து இருக்கிறாராம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X