2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிம்புவுக்கு கைகொடுத்த நயன்தாரா

George   / 2016 மே 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இது நம்ம ஆளு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நான்கு நாட்களாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலித்து வருகிறது. இரண்டே நாளில் 10 கோடி வரை வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள்.

தேனாண்டாள் பிலிம்ஸ், சரியான திரையரங்குகளில்; வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்ததும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறும் அதே வேளையில், நயன்தாராவும் இன்னொரு முக்கிய காரணமாகியிருக்கிறார் என்கிறார்கள். 

அண்மைகாலமாக நயன்தாராவுக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகியிருப்பதோடு, அவரது முன்னாள் காதலரான சிம்புவுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்றே இளவட்ட ரசிகர்கள், திரையரங்குகளுக்கு வருகிறார்களாம்.

இதனால், இது நம்ம ஆளு திரைப்படத்தின் வசூலுக்கு நயன்தாராவும் பெரிய அளவில் கைகொடுத்துள்ளார் என்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X