2025 மே 14, புதன்கிழமை

சிவகார்த்திகேயனுடன் இணையும் நகைச்சுவை நடிகர்

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ரெமோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த திரைப்படம் ஒக்டோபர் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

மோகன் ராஜா இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மோகன் ராஜா மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஆர்.ஜே பாலாஜி முதன்முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .