Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 24 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையில் உருவாகி வரும் “மகாநதி” திரைப்படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தில், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், நானி, சமந்தா உட்பட பலரும் நடிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் நடித்த கீர்த்தி சுரேஷ், அதன்பிறகு வேறு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் மகாநதி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அதோடு, இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு, சாவித்ரி பற்றிய பல அரிய தகவல்களை அவருடன் பணியாற்றிய சீனியர் கலைஞர்களிடம் கீர்த்தி சுரேஷ் கேட்டறிந்து கொண்டாராம் .
அந்த வகையில், தான் நடித்த ஒரு பழைய திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அந்த செட்டில் பணியாற்றிய அனைவருக்கும் சாவித்ரி தங்க நாணயம் பரிசளித்ததை அறிந்த கீர்த்தி சுரேசும், சமீபத்தில் மகாநதி படப்பிடிப்புக் குழுவுக்கு தங்க நாணயம் பரிசளித்துள்ளார்.
10 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
34 minute ago
40 minute ago