2025 மே 09, வெள்ளிக்கிழமை

சிநேகனுடன் இணைகிறார் ஓவியா

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓவியா மற்றும் சிநேகன் ஆகியோர், பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்கள் . அதிலும் மக்களால் அதிகம் விரும்பபட்டவர் ஓவியா. ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்தவண்ணம் உள்ளன. ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிநேகனையும், ஓவியாவையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் சி.சத்யா.

இசையமைப்பாளராக இருந்த சத்யா, இந்த படம் மூலம் முதல் முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். இந்த படத்தை இயக்குவது யார், இதில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X