Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 12 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அறிவித்தபடி 17 ஆவது போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவாரா? இல்லையா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில், நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து கவின், மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி மற்றும் அபிராமி ஆகிய 5 போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பகிரங்கமாக நடந்த இந்த நொமினேஷனால், ஒருவருக்கொருவர் வீண் மனஸ்தாபத்தால் கோபித்துக்கொண்டதோடு கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளனர். இதில், ரேஷ்மா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் அழுகையின் உச்சத்திற்கு சென்றனர்.
இப்படியிருந்த இந்த எபிசோடை சாண்டி தனது வழக்கமான நகைச்சுவையின் மூலமாக போட்டியாளர்களை கலகலவென சிரிக்க வைத்துள்ளார். கொஞ்சம் வித்தியாசமாக எம்ஜிஆர் கெட்டப் போட்டு அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் இதே போன்று இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என்பது இன்றைய புரோமோ வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது.
இன்றைய புரோமோவில் போட்டியாளர்களுக்கு போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறி, ஒலிக்கப்படும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.
இந்த டாஸ்க்கில் சரவணன் – விஜயகாந்த், கவின் – தல அஜித், சாண்டி – சிம்பு, லோஸ்லியா – த்ரிஷா, முகென் – விஜய், சேரனுக்கு – ரஜினி என்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நடனம் ஆடி அசத்தியுள்ளனர்.
பெண்களைப் பற்றி இழிவாக பேசிய சரவணன் மக்களிடையே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அப்படியிருக்கும் போது, இன்றைய ஆட்டம் போடு டாஸ்க்கில் எப்படி அவர் பெண்களுடன் இணைந்து நடனம் ஆடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தாலும் சர்ச்சைக்கு இடம்கொடுக்குமா? என்பது பலரது கேள்வி.
இது ஒருபுறம் இருக்க நாட்டாமை டாஸ்க்கில் சேரன் மீது மீரா மிதுன் கொடுத்த சர்ச்சை புகாரை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியிருக்கும் போது அவரும் எப்படி போட்டியாளர்களுடன் இணைந்து டான்ஸ் ஆடுவார் என்பதும் கேள்விக்குறி தான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago