Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மே 23 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில், ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கிறார்.
அனிருத் இசையமைக்க, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஜூன் மாதம் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், இன்னும் இந்தத் திரைப்படத்துக்கான கதாநாயகி தெரிவாகவில்லை.
இந்தத் திரைப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக அதாவது கதாநாயகியாக, சிம்ரன் நடிக்க இருக்கிறாரென்ற ஒரு தகவல், படத்துறையில் அடிபடுகிறது. சமீபத்தில் நடந்த 'காலா' ஓடியோ வெளீயிட்டு விழாவில், “இனி என் மகள் வயதுடைய கதாநாயகிகளுடன் நடிக்க விருப்பம் இல்லை” என்று, ரஜினி பேசியிருந்தார்.
எனவே, ரஜினியின் வயதுக்கும் அவர் ஏற்கும் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான ஹீரோயினைத் தேர்வுசெய்ய, கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில், இந்தத் திரைப்படத்தில், சிம்ரனை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு, நம்பர் வன் கதாநாயகியாக இருந்த சிம்ரன், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சரத்குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இதுவரை அவர், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததில்லை. சிம்ரனுக்கு இருந்த இந்தக்குறையை, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதன் மூலம் நிறைவேறப்போகிறது. ரஜினிக்கு ஜோடிசேர வேண்டுமென்பது தான், சிம்ரனின் நீண்டகாலக் கனவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago