George / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்கு பிறகு, ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது.
தமிழகம் மட்டுமில்லாது உலகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
பின்னர், மாலை 6 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது, அந்த இடத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் சோகமயத்துடனும், அழுகை கலந்த முகத்துடனும் காணப்பட்டனர். ஆனால், இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட கருணாஸ், ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்துக்கும் ஆளாக்கியுள்ளது.
14 minute ago
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
22 minute ago