Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 23 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனிருத் - சிவகாரத்திகேயன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ரெமோ.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இத்திரைப்படத்தின் முதற்பார்வை போஸ்டரையும் ஜுன் மாதம் 9ஆம் திகதி வெளியிடவுள்ளனர்.
அதே தினத்தில் டைட்டில் பாடலையும் வெளியிடபோவதாக அனிருத் கூறியுள்ளார்.
இந்த டைட்டில் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். இந்த டைட்டில் பாடலும் முதற்பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இத்திரைப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அனிருத் - சிவகாரத்திகேயன் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago