Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளம் இயக்குநரான அட்லி, ஆசிரியர்கள் தினத்தையொட்டி ,தனக்குத் தொழில் கற்று கொடுத்த ஆசானாக விளங்கும் இயக்குநர் ஷங்கரை பாராட்டும் வகையில், ஒரு டுவீட்டை இன்று (05) பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், “ஆசிரியர் தினம் என்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டும் தான் வருமென்றும், ஆனால் நீங்கள் கற்று கொடுத்த பாடம் எனக்கு தினமும் ஞாபகம் வந்து, என்னை பெரிய ஆளாக்கியுள்ளது. உங்களை குருவாக பெற்றதில் பெருமைப்படுகிறேன்” என்று ஒரு ஆங்கில பதிவை தனது டுவிட்டரில் அட்லி பதிவு செய்துள்ளார்.
ஆனால் இந்த பதிவை நேற்றே (04) ஒரு டுவிட்டர் பயனாளி பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அதில் அச்சு அசலாக ஒரு எழுத்து கூட மாறாமல் அட்லி அதை காப்பி பேஸ்ட் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அத்துடன் அட்லி இயக்கிய 'ராஜா ராணி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' திரைப்படங்கள் 'மெளனராகம், .'சத்ரியன்' மற்றும் 'அபூர்வ சகோதரர்கள் ஆகிய படங்களை காப்பியடித்து எடுத்ததாக விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், ஒரு டுவீட்டை கூட சொந்தமாக போட முடியாதா? என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருவதுடன், பல விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளார்.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago