Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஏப்ரல் 10 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேதாளம் திரைப்படம் போலவே தெறி திரைப்பட அனுமதிசீட்டுகளுக்கு விலை நிர்ணயம் செய்து இலாபத்தை அள்ளலாம் என கணக்குப் போட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்களின் பேராசையில் ஒரு பெரிய பாறாங்கல்லே விழுந்துவிட்டது.
தெறி திரைப்படம் வரும் 14ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதுடன் வியாபாரம் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டது. வேதாளம் திரைபபடம் வெளியான ஒரு வாரத்துக்கு சாதாரணமாக 500 இந்திய ரூபாய் கட்டணம் வைத்து திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் இலாபத்தை அள்ளினார்கள்.
அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர இரசிகர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு மேலதிகமாக வசூலித்த இந்த கட்டணம் கணக்கில் வராதது. அது விநியோகஸ்தர்களையும் சென்று சேராது, தயாரிப்பாளர்களையும் சென்று சேராது. வேதாளம் திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு இலாபம் சில கோடிகள் மட்டும்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
இந்நிலையில், தெறி வெளியாகும் தியேட்டர்களில் அளவுக்கதிகமான கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி வசூலிக்கும் தியேட்டர்கள் மீது புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, இது குறிப்பாக தெறி திரைப்படத்தை மனதில் வைத்தே செயல்படுத்தப்படலாம் என்று திரையுலக வட்டாரங்கள் அச்சமடைந்துள்ளன. அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று இலாபத்தை அள்ளலாம் என நினைத்திருந்தவர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்களாம். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்துக்கு டிக்கெட் விற்றால் எப்போது இலாபத்தை அள்ளுவது என புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம்.
12 minute ago
16 minute ago
22 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
22 minute ago
42 minute ago