Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் 9ஆம் திகதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் வேற லெவலில் நடந்து வருகிறது.
குறிப்பாக ’கபாலி’ படத்தில் விமானத்தில் பிரமோஷன் செய்ததுபோல ’தர்பார்’ படத்திற்கும் விமானத்தில் பிரமோஷன் செய்யப்பட்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.
அந்த விமானங்கள் இன்று முதல் விண்ணில் பறக்க உள்ளதால் தர்பார் படத்தின் புரமோஷன் இன்று முதல் வேற லெவலில் இருப்பதாக கூறப்படுகிறது.
தர்பார் படத்தின் போஸ்டர்கள் விமானத்தில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தை இன்று இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் ரஜினி படத்திற்கு மட்டுமே இதுவரை விமானத்தில் புரமோஷன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
47 minute ago
1 hours ago