Editorial / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெரும்டாஸ்குகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய டாஸ்குகளில் தர்ஷன் அதிக புள்ளிகள் எடுத்துள்ளார்.
இருப்பினும் இனி வரும் நான்கு நாட்களிலும் அதிக புள்ளிகள் எடுக்கும் நபரே இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதி வாய்ந்தவராக இருப்பார்.
இந்த நிலையில், இன்று 1 முதல் 7 வரை போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க் நடக்கின்றது.
இதில் போட்டியாளர்களில் பலர் முதலிடத்தில் தர்ஷனை வைத்திருக்கும் நிலையில் சேரன் மட்டும் தர்ஷனின் புகைப்படத்தை முதலிடத்தில் இருந்து அகற்றிவிட்டு தன்னுடைய புகைப்படத்தை வைக்கிறார்.
அதன்பின் அவர் கூறும் விளக்கம் என்னவெனில் ’முதலிடம் நான்தான் அப்பத்தான் நான் ஃபர்ஸ்ட் வரமுடியும். இங்கே இருக்கும் எல்லாரையும் விட எனக்கு வயது கொஞ்சம் அதிகம். அனுபவமும் அதிகம்.
பலர் என்னிடம் இந்த போட்டியில் இளைஞர்கள் தானே ஜெயிப்பார்கள். உங்களுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்டார்கள். இங்கே இருக்கும் அனைவருக்கும் தனித்தனியே பின்தொடர்பவர்கள் உண்டு, ஆர்மி உண்டு, ரசிகர்கள் உண்டு.
ஆனால், அவர்கள் அனைவரும் என்னையும் பின்தொடர்பவர்கள். எனவே நான் கண்டிப்பாக வெற்றிப்பெறுவேன் என்று அவர்களுக்கு பதில் சொன்னேன் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்'.
சேரனின் தன்னம்பிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago