Kogilavani / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகுபலி திரைப்படத்துக்குப் பின்னர், உலகளவில் பிரபலமாகியுள்ள நடிகர் பிரபாஸ், தற்போது, சாஹோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இவருக்குத் தற்போது, 38 வயதாகிறது. பாகுபலி திரைப்படத்தில், நடிகை அனுஷ்காவுடன் சேர்ந்து நடித்தபோது, இருவரும் காதலித்து வருவதாக பரவலாகப் பேசப்பட்டது. இருவரும், அந்தக் கிசு கிசுவுக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்து மனம்திறந்துள்ளார் பிரபாஸ்.
“தற்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. இதனால் எனது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நினைக்கிறேன். திருமணம் குறித்து நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னையும், என்னுடன் சேர்ந்து நடித்த ஒரு நடிகையையும் (அனுஷ்கா) இணைத்துச் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லை” என்று கூறியுள்ளாராம்.
1 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Nov 2025