Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 18 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா, தமிழில் ‛பரமபத விளையாட்டு, ராங்கி' படங்களில் நடிக்கிறார்.
தெலுங்கில் 2006ல் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் படத்தில் நடித்தவர் தற்போது மீண்டும் கொரட்டல்ல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில், அழகின் ரகசியம் குறித்து த்ரிஷா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“அழகு என்பது இயற்கையாகவே இருந்தபோதும், சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம் சம்பந்தப்பட்டதும் கூட. அதோடு நான் அவ்வப்போது உண்ணாவிரதம் இருக்கிறேன். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குகிறேன்.
ஒரு வாரத்தில் 4-5 முறை உடற்பயிற்சி செய்கிறேன். அதோடு சரியான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். இதுவே எனது அழகின் ரகசியம்” என தெரிவித்துள்ளார் த்ரிஷா.
14 minute ago
23 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
24 minute ago