Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 07 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா...' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் டீசரும் இணையதளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் 'நெருப்புடா' என்ற பாடல் தலைப்பை தற்போது விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார்.
விக்ரம் பிரபு அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய திரைப்படத்துக்கு நெருப்புடா என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு, தீயணைப்பு வீரராக நடிக்கிறாராம். அதனால், நெருப்புடா என்ற தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் அந்த தலைப்புக்கான அனுமதி கேட்டுள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணு எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே அந்த தலைப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் பெயர் அறிமுக விழா சென்னையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் நேற்று நடைபெற்றது. திரைப்படத்தின் அறிமுக விழா மட்டுமில்லாது, விக்ரம் பிரபுவின் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் வெளியிடப்பட்டது.
அதன்படி, விக்ரம் பிரபுவின் புதிய தயாரிப்பு நிறுவனத்துக்கு பெர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தை தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார். நெருப்புடா திரைப்படத்தின் தலைப்பை கலைப்புலி எஸ்.தாணு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த விழாவில் விக்ரம் பிரபுவின் அப்பாவும், நடிகருமான பிரபு மற்றும் ராம்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
14 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
38 minute ago