Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் வெளிவந்த ’பட்டாஸ்’ திரைப்படத்தில் அடிமுறை என்ற தற்காப்புக் கலையை சினேகா முறைப்படி பயின்று அதில் அதிரடி காட்சிகளில் நடித்து இருந்தார்.
அதேபோல் தளபதி விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்திலும் மாளவிகா மோகனன் முறைப்படி சண்டை பயிற்சி பெற்று அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.
விஜய்சேதுபதியுடன் மாளவிகா மோகனன் மோதும் ஒரு சண்டைக்காட்சி மாஸ்டர் படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை அமலாபால் நடித்து முடித்துள்ள ’அதோ அந்த பறவை’ என்ற திரைப்படத்தில் அமலாபாலுக்கு ‘க்ராவ் மஹா’என்ற சண்டைப் பயிற்சியை முறைப்படி பயிற்சி அதிரடிகாட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
தனது உயிரை பணயம் வைத்து நடிகை அமலாபால் நடித்துள்ள இந்த படம் ஒரு அதிரடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு படத்தின் நாயகி என்றால் பாடலுக்கு மட்டும் வந்து போகும் கேரக்டர்களில் நடிக்காமல் அதிரடியில் தற்போதைய நடிகைகள் கவனம் செலுத்தி வருவதுதமிழ் சினிமா ஆரோக்கியமான வழியில் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது.
14 minute ago
23 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
24 minute ago