George / 2016 ஜூன் 24 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ திரைப்படத்தின் முதற்பார்வையை இயக்குநர் ஷங்கர் நேற்று இரவு வெளியிட்டார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ கெட்டப்தான முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெண் வேடத்தில் அவர் நடித்திருக்கும் நர்ஸ் அக்கா கெட்டப் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு நிஜ பெண் போலவே காட்சி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன்.
அவ்வை சண்முகியில் கமல் பெண் வேடத்துக்காக அதிகமான சிரத்தை எடுத்துக்கொண்டது போன்று இந்த நர்ஸ் அக்கா வேடத்துக்காகவும் மணிக்கணக்கில் மேக்கப் போட்டு பெண்களின் மேனரிஸத்தை தனக்குள் கொண்டு வந்து நடித்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
பாடல் காட்சியிலும் சிவகார்த்திகேயனை ஒரு பெண்ணாகவே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக நடன மங்கைகள் ஆடுவது போன்று நளினமான உடல் அசைவு களை கொடுத்து அவரை ஆட வைத்திருக்கிறாராம் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம்.

28 minute ago
54 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
54 minute ago
55 minute ago
1 hours ago