Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதாசிரியர் என பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலம் (வயது 75) காலமானார்.
சென்னை தி.நகரில் குடும்பத்தோடு வசித்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (09) காலை தூக்கத்திலேயே இறந்தார்.
பஞ்சு அருணாசலத்தின் மூத்த மகன் மற்றும் இளைய மகள் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் வர இரண்டொரு நாளாகும் என தெரிகிறது.
இதனால் பஞ்சு அருணாசலத்தின் உடல் இன்று மாலை வரை திநகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுவதாகவும், பின்னர் அவரது உடல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பதப்படுத்தப்படும் பெட்டியில் வைக்கப்பட இருப்பதாகவும், மகன் மற்றும் மகள்கள் வந்தபின்னர் நல்லடக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என இயக்குநர் வெங்கட்பிரபு, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1941ஆம் ஆண்டு, காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டி தான் பஞ்சு அருணாசலத்தின் சொந்த ஊர். தன் தாத்தாவின் பெயரான அருணாசலத்துடன் அவரது குல தெய்வமான பஞ்சநாதசாமி பெயரில் உள்ள பஞ்சையும் இணைத்து பஞ்சு அருணாசலம் என்று அவரது பெற்றோர் பெயர் வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago