Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 20 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் தயாராகவுள்ள திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆரம்பமான திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற 'சங்கமித்ரா'வை, தேனாண்டாள் ஸ்டுடியோஸ், சுமார் 4 பில்லியன் இந்திய ரூபாய் செலவில் தயாரிக்க, சுந்தர் சி இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நாயகர்களாக நடிக்கவுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் ஆரம்ப விழாவுக்காக, கேன்ஸ் வரை சென்ற திரைப்படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன், அதன் பின்னர் அதிலிருந்து திடீரென விலகினார்.
கைவசம் 'சபாஷ் நாயுடு' தவிர வேறு எந்தத் திரைப்படமும் இல்லாத ஸ்ருதிஹாசன், கடந்த வாரம் சென்னைக்கு வந்து பல பேட்டிகளைக் கொடுத்தார். அப்போது 'சங்கமித்ரா' திரைப்படம் பற்றி பேச விரும்பவில்லை என்று அவர் சொன்னார். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட இயக்குநர் சுந்தர்.சியின் மனைவி குஷ்பு, ஸ்ருதிஹாசனை மறைமுகமாகத் தாக்கி, டுவிட்டரில் காட்டமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத பொருட்செலவில் எடுக்கப்பட உள்ள 'சங்கமித்ரா' போன்ற திரைப்படத்தை, சரியான திட்டமிடல் இல்லாமல் எடுக்க முடியாது. 'சங்கமித்ரா' திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை என, சிலர் மாறான கமெண்ட்டுகளைக் கூறி வருகிறார்கள். இதற்கான வேலைகள், கடந்த இரண்டு வருடங்களாக நடந்துவருகிறது. தொழிற்பண்பு இல்லாதவர்களுக்கு அது பற்றி தெரியாது.
'சங்கமித்ரா' போன்ற திரைப்படங்களுக்கு, ஷுட்டிங் என்பது வெறும் 30 சதவீதம் தான். அதற்கு முன்பாகவே, 70 சதவீத வேலைகள் முடிந்துவிடும். உங்களது குறைகளுக்காக மற்றவர்களைக் குறைசொல்லக் கூடாது. திராட்சி புளித்துவிட்டதா? பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடமிருந்து இன்னும் கொஞ்சம் தொழிற்பண்பை எதிர்பார்க்கிறேன். உங்களது சொந்தத் தவறுகளைப் பார்ப்பதும் ஏற்றுக் கொள்வதும், உங்களை நீண்ட தூரம் போகச் செய்ய தாழ்மையான உதவியாக இருக்கும்” என, குஷ்பு காட்டமாக பதில் கூறியுள்ளார்.
8 hours ago
9 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
23 Aug 2025