Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் குண்டூர் மருத்துவமனையில், ஒரு பெண்ணுக்கு அண்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அரசு மருத்துவமனையில், தாதியாக பணிபுரிபவர் வினயகுமாரி என்பவருக்கு, தலையில் உறைந்துபோயுள்ள இரத்தத்தை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பாகுபலி திரைப்படம் பார்த்தபடியே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுவாரஷ்யமான தகவல் வௌியாகியுள்ளது.
வினயகுமாரிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. வைத்தியர்களின் பரிசோதனையின் பின்னர், அவரது தலையில் இரத்தம் உறைந்துபோயுள்ளமை தெரியவந்துள்ளது. அதனை, சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றுவதற்கு வைத்தியர்கள் முடிவு செய்தனர்.
சத்திரசிகிச்சையின் போது, அவர் உறங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாகுபலி திரைப்படம் காண்பிப்பதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி, பாகுபலி படம் பார்த்தபடி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சை சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
5 hours ago
5 hours ago