Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் பத்து நாள்களில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடந்த சீசனில் பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
முதலில் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக மகத், யாஷிகா ஆனந்த் வருகை தந்த நிலையில் அதனையடுத்து ஜனனி ஐயர், ரித்விகா ஆகியோர்வருகை தந்தனர்.
இந்த நிலையில் தற்போது கடந்த சீசனில் இரண்டாமிடம் பெற்ற ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ளார். ஆட்டம் பாட்டத்துடன் உள்ளே நுழையும் அவரை சாண்டி உள்பட போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்கின்றனர்.
லொஸ்லியாவின் கைகோர்த்து நடனம் ஆடும் ஐஸ்வர்யா தத்தா, மற்றவர்களிடம் உற்சாகமாக பேசுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் தனக்கு 5 படங்கள் ஒப்பந்தமாகி இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இன்றைய நிகழ்ச்சி ஐஸ்வர்யாவால் கலகலப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago