2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் இன்று வெளியேற்றம்?

Editorial   / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 04:19 - 1     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போதுள்ள ஐவரில் மூவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். அதில் இந்த வாரம் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுவிட்டால், நால்வரில் ஒருவருக்கு மட்டுமே டைட்டில் கிடைக்கும். 

ஏற்கெனவே இறுதி போட்டிக்கு முகின் தகுதி பெற்றுவிட்டதால் மீதியுள்ள மூவரில் இருவர் மட்டுமே இறுதிபோட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதில் பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெறும் ஒருவருக்கு மட்டுமே ரூ.50 லட்சம் பரிசு கிடைக்கும். 

ஆனால், இன்றே வெளியேறும் போட்டியாளருக்கு ரூ.5 இலட்சம் வழங்கப்படும் என அறிவிக்கின்றார். இதனையடுத்து கவின் ரூ.5 இலட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்.

கவினின் இந்த முடிவு லொஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கவினை செல்ல வேண்டாம் என இருவரும் தடுக்கின்றனர். 

ஆனால், கவின் தனது முடிவில் உறுதியாக இருப்பார் போல் தெரிகிறது. இருப்பினும் ரூ.5 இலட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறுவாரா? அல்லது மனம் மாறுவாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.


  Comments - 1

  • Abdul jappar Wednesday, 25 September 2019 01:56 PM

    Kavin konjam overa pora mathiri theriuthu so I'm not like kavin, dharshan so cute

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X