Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெளதம் மேனன் இயக்கத்தில் “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ், ஹொலிவூட் திரைப்படமொன்றில் நடித்து முடித்து விட்டு, தற்போது வெற்றிமாறன் இயக்கும் “வடசென்னை” திரைப்படத்தில், பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவை தவிர, மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவும் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதேவேளை, நடிகர் தனுஷும் இசையமைப்பாளர் அனிருத்தும், ஹிந்தி திரைப்படமொன்றின் மூலம் இணையவுள்ளனர். தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தனுஷ் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்களுக்கும் தொடர்ச்சியாக இசையமைத்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை.
அதனால், தனுஷ் படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. ஏனைய இசையமைப்பாளர்கள் இசையமைத்தாலும், அனிருத் அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. எனவே, இருவரையும் இணைத்துவைக்க சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஹிந்தியில் தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியிருக்கிறார் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
15 minute ago
48 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
48 minute ago
59 minute ago
1 hours ago