Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 12 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை சமந்தா, மீண்டும் காதலில் விழுந்து விட்டதாக செய்தி பரவியுள்ளது. சமந்தாவும் நடிகர் சித்தார்த்தும் ஓரிரு வருடங்களுக்கு முன் தீவிரமாக காதலித்து வந்தனர்.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த காதலில் விரிசல் விழுந்தது. அதன் பின் இருவரும் சமூக வலைத்தளங்களில் மறைமுகமாக ஒருவரை மற்றொருவர் தாக்கி பதிவிட்டனர்.
இருவரது காதலில் யாரோ ஒரு முன்னணி ஹீரோதான் விளையாடிவிட்டார் என்று டோலிவுட்டில் செய்தி வெளியானது.
இந்நிலையில், சமந்தா தற்போது மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் 'என்னால் நல்ல மகளாகவும், தோழியாகவும், பெண் தோழியாகவும் இருக்க முடியவில்லை' என்று பதிவிட்டிருந்தார்.
24 திரைப்படம் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சமந்தா.
அப்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், 'நான் சிங்கிள் ஆக இருக்கிறேன் என்று யார் சொன்னது' என பதிலளித்துவிட்டு, அது பற்றி மேலும் தெரிவிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
ஆக, சமந்தா தற்போது யாரையோ மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் என டோலிவூட்டில் பரவலாகப் பேசிக் கொள்கிறார்கள். அவர் ஒரு முன்னணி நடிகர் என்று மட்டும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இனி, அவர் சொல்வதுபோலதான் திரைப்படங்களில் நடிக்க சமந்தா சம்மதிக்கப் போவதாகவும் கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago