Editorial / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்குக் கிடைத்த ஜெக் பொட் அதிர்ஷ்டத்தால், மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்கிறாராம் அமலா போல்.

தேசிய விருது பெற்ற பிரபல மலையால இயக்குனர் பிளஸ்சியின் அடுத்த படமான ஆடுஜீவிதத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா போல். இயக்குனர் பிளஸ்சியின் திரைப்படத்தில் நடிக்க பல நடிகைகள் விரும்பிய நிலையில், அமலா போலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இத்திரைப்படத்தில் நாயகனாக பிருத்திவிராஜ் நடிக்கவுள்ளார். பிரம்மாண்ட செலவில் தயாராகவிருக்கும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
தேசிய, மாநில மற்றும் பல விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழும் இயக்குனரின் படத்தில் நடிப்பதை நினைத்து அமலா போல் மகிழ்ச்சியில் உள்ளார்.

இது குறித்து அமலா போல், “தேசிய விருது பெற்ற பிளஸியின் ஆடுஜீவிதம் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. பென்யமினின் நாவலை அப்படியே 3டியில் படமாக்குகிறார்கள். இந்த படத்திற்காக ப்ரித்விராஜ் 2 ஆண்டுகள் ஒதுக்கியுள்ளார். 25 ஆண்டுகள் கழித்து மலையாள திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்” என்று தெரிவித்துள்ளார்.

3 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago