Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொங்கலுக்கு வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில், சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து, சிம்ரனுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றதாம்.
இந்நிலையில் மாதவனுடன் இணைந்து, ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம் சிம்ரன். ஏற்கெனவே பாலச்சந்தர் இயக்கத்தில், ‘பார்த்தாலே பரவசம்’, மணிரத்னம் இயக்கத்தில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்ற திரைப்படங்களில், மாதவனும் சிம்ரனும் இணைந்து நடித்துள்ளார்கள்.
இஸ்ரோ (ISRO) வில் விஞானியாக இருந்த நம்பி நாராயாணன், இந்தியாவின் தொழில்நுட்பத்தை, அந்நிய நாடுகளுக்கு விற்றுவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்ஸ்’ என்ற பெயரில், இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
மாதவன் இந்தத் திரைப்படத்தில் நம்பி நாராயணனாக நடிப்பதோடு, ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து, இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில்தான், மாதவனுடன் சிம்ரன் நடிக்க இருக்கிறார். மாதவனுக்கு ஜோடியாக நடித்தாலும் இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில், வயதான தோற்றத்தில் தான் வருகிறாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
34 minute ago
41 minute ago