Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்தாலே பிரச்சனை வந்துவிடும் என்பதே 100 நாட்களின் பிக்பாஸ் வீட்டில் நடக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக வந்தபோது சண்டை சச்சரவு ஏற்பட்டது. மீண்டும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வனிதா வந்த போதும் சண்டை, சச்சரவுகளுக்கு குறைவில்லை.
சக போட்டியாளர் யாரையும் பேசவிடாமல் வனிதா மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இரு முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, இன்று மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.
முதல் வேலையாக தனது வத்திக்குச்சி வேலையை ஆரம்பித்து, தர்ஷன் வெளியேறியதற்கு காரணம் ஷெரின் தான் என்றும் நான் சொன்னதை அப்போது யாரும் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனை மறுத்த சாக்சி “நீங்கள் சொல்வதால் உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது என்று கூறி ஷெரினுக்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும் வனிதாவின் பேச்சை கேட்ட ஷெரின் மனம் உடைந்து அழும் நிலையில், .வனிதா வீட்டிற்குள் வந்ததால் கலகலப்பாக இருந்த பிக்பாஸ் வீடு மீண்டும் சோகமாக மாறிவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago