Editorial / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் காணாமற்போயுள்ள நிலையில், காரை திருடிச்சென்றதாக சந்தேகிக்கப்படும் காரின் சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்..
யுவன் தனது மனைவியின் பயன்பாட்டுக்காக அவுடி A6 ரக கார் ஒன்றை வைத்துள்ளதோடு, சாரதியாக நவாஸ்கான் சாதிக் (34) என்பவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக யுவன் மதுரை சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவியும் உறவினர்களும் இருந்துள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் நவாஸ் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
எனினும் இரவு அவர் வீடு திரும்பாத நிலையில், தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அவரது கைத்தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காருடன் சாரதி தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து நள்ளிரவு 1 மணி அளவில் யுவன் சார்பில் நாகராஜ் என்பவர் கார் காணாமற்போனமை தொடர்பில் எழும்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago