Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் காணாமற்போயுள்ளதாக கடந்த 2ஆம் திகதி தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், காரை திருடிச்சென்றதாக காரின் சாரதி நவாஸ்கான் சாதிக் மீது சந்தேகம் எழுந்ததோடு, இது தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டது.
எனினும் கார் திருட்டுப்போகவில்லை எனவும், சாரதி குற்றவாளி அல்லவெனவும் தற்போது தெரியவந்துள்ளது.
பொலிஸார் மொபைல் டிராக்கிங் தொழில்நுட்பத்தின் ஊடாக சாரதியின் கைத்தொலைபேசியை கண்டுபிடிக்க முயற்சித்த சமயத்தில் அது யுவனின் வீட்டுக்கு அருகில் இருப்பது தெரியவந்தது.
சாரதியின் கைத்தொலைபேசி யுவனின் வீடு அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதோடு. பொலிஸார் கைத் தொலைபேசியை கைப்பற்றும் நோக்குடன் அங்கு விரைந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சாரதியும் அங்கு இருந்துள்ளார். இது குறித்து சாரதி குறிப்பிடுகையில் "வழமையாக காரை நிறுத்தும் இடத்தில் வேறு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததால் காரை கீழ் தளத்தில் நிறுத்தினேன். என் கைத்தொலைபேசியும் சார்ஜ் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நானும் இங்கேயே உறங்கிவிட்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
9 minute ago
15 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
16 minute ago