George / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60ஆவது திரைப்படத்துக்கு இப்போது வரை என்ன தலைப்பு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளனர்.
ஆனால், அந்த திரைப்படத்தில் பணிபுரியும் குழுவினர், „எங்க வீட்டுப்பிள்ளை... என்பதுதான் திரைப்படத்தில் பெயர் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில், விஜய் திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வரும் மலையாள நடிகை அபர்ணா வினோத், கடந்த மாதம் தனது டுவிட்டரில், விஜய் 60ஆவது திரைப்படத்துக்கு எங்க வீட்டுப்பிள்ளை என்ற தலைப்பை வைப்பதற்கான ஆலோசனை நடந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இப்போது அந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். அதாவது, 'விஜய் திரைப்படத்துக்கு தலைப்பு குறித்து நான் எந்த செய்தியும் வெளியிடவில்லை. காரணம், அப்போது நான் டுவிட்டரிலேயே இல்லை. யாரோ எனது பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கி அந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்' என்று சொல்லியுள்ளார்.
அதனை அபர்ணா சாதாரணமாக சொல்லவில்லை... தனது பெயரில் புதிய டுவிட்டர் கணக்குத் தொடங்கி இந்த தகவலை சொல்லியுள்ளார்.
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago