Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியாகராஜன் குமாரராஜா படத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் பி.எஸ்.வினோத்.
'அநீதி கதைகள்' என இப்படத்துக்கு பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது ’சூப்பர் டீலக்ஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மேலும், சமந்தா தனது கதாபாத்திரத்தின் லுக்கை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது அக்கதாபாத்திரத்தின் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago