2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஹிருத்திக் ஏமாற்றினார்

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

“தமிழில் தாம்தூம்” படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.மூன்று தடவைகள் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்து அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

நானும் ரோஷனும் தீவிரமாக காதலித்தோம். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தினேன். ஆனால் தனக்கு மனைவி இருப்பதை காரணமாக சொல்லி திருமணத்துக்கு அவர் மறுத்தார். வெளி உலகுக்கு தெரியாமல் காதலை நீடிக்கலாம் என்றும் கூறினார்.

நான், திருமணம் செய்ய மறுத்தால் காதலிப்பது அர்த்தமற்றது என்று சொல்லி விலகி விட்டேன். அதன்பிறகு என்னை ஒருநாள் தொடர்பு கொண்டு மனைவி சுசானேவை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக கூறினார். விரைவில் விவாகரத்து கிடைத்து விடும் என்றும் அதன் பிறகு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். அதை நம்பி மீண்டும் அவரோடு நெருங்கி பழகினேன்.

ஆனால் அப்போது இன்னொரு நடிகையுடன் அவர் தொடர்பு வைத்திருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது,'என்னை மறந்து விடு' என்று சாதாரணமாக சொன்னார். அந்த தோல்வியில் இருந்து என்னால் வெளிவரமுடியாமல் தவித்தேன். அதன்பிறகு நான் நடித்த 'குயின்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரவேற்பை பெற்றது.

அப்போது ஹிருத்திக் ரோஷன் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். மீண்டும் காதலை தொடரலாமா? என்று கேட்டேன். குயின் படம் ஜெயித்த தலைக்கனத்தில் பேசுகிறாயா' என்று கோபித்துக்கொண்டார். அதன்பிறகுதான் ஹிருத்திக் ரோஷனுக்கும் எனக்கும் இருந்த காதலை வெளிஉலகுக்கு தெரியப்படுத்தினேன்.

இதனால் எனக்கு மிரட்டல்கள் வந்தன. எனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தினார்கள்.

இதுகுறித்து மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .